Saturday 20 April 2024

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணி காலமானார்..!!!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணி காலமானார்..!!!


வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சிவாகம நெறிகளை நன்கு கற்றுத்தேர்ந்தவரும், சிறந்த வேத வித்தகருமான இவர் இந்தியாவில் குருகுலக் கல்வியையும், பட்டப் படிப்பையும் நிறைவு செய்திருந்தார். அத்துடன் பல ஆலயங்களின் குடமுழுக்குகளைச் சிறப்புற நெறிப்படுத்திய பெருமையும் இவரைச்சாரும்.

குருமணியின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





இன்றைய ராசிபலன் - 20.04.2024..!!!

இன்றைய ராசிபலன் - 20.04.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ரொம்பவும் கடினமாக எடுத்துக்கொண்டு அதைப் பற்றி யோசித்து யோசித்து மனசை குழப்பிக் கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்திலும் சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்க சில பிரச்சனைகள் மனித ரூபத்தில் வரும். அதையெல்லாம் தாண்டி வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய கடமை இன்று உங்களிடத்தில் உள்ளது. தொழிலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் கவனத்தோடு இருங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவசியமாக பயணம் செய்ய வேண்டும் என்றால் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் விலை உயர்ந்த பொருட்கள் காசு பணம் இவைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு கஷ்டமான வேலையை கொடுத்தாலும், சுலபமாக போன போக்கில் முடித்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளிடையே பேசும்போது கவனமாக இருக்கவும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பிரச்சனைகளை திறமையோடு எதிர்கொள்ளவில்லை என்றால், சிக்கல்கள் வந்துவிடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கூடுமானவரை இன்றைக்கான வேலையை இன்றே முடித்து விடவும். சோம்பேறித்தனம் வேண்டாம்.


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக்கும் வித்தையை வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு இன்று அனைவரும் மயங்குவார்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தடைகளை தகர்க்கும் நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் வரலாம். ஆனால் எப்படியாவது போராடி கையில் எடுத்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என்று உறுதியோடு செயல்படுவீர்கள். விடாமுயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் இறுதியில் மனநிறைவோடு தூங்கச் செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று நினைத்ததை எல்லாம் நடத்திக் காட்டுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும். பிரச்சனையை பேசிய சரி செய்யும் அளவுக்கு உங்களிடம் திறமை இருக்கும். முக வசீகரம் அதிகமாகும். குறிப்பாக கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் சரியாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். காலை நேரம் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், போகப் போக உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு வந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை வீட்டு சாப்பாடு சாப்பிடவும். நிறைய தண்ணீர் குடியுங்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோசனைகள் சரியாக இருக்காது. எல்லா விஷயத்தையும் நெகட்டிவ் ஆகவே சிந்திக்க நேரிடும். இதனால் வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். பிடித்த இறைவனை வழிபாடு செய்யுங்கள். மனதிருப்தியோடு இன்றைய நாளை கடந்து சென்றால் நல்லது நடக்கும். அரைகுறை மனதோடு இருப்பவர்கள், புது யோசனை புது முடிவை எடுக்காதீங்க. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். எடுத்த முயற்சியில் எல்லாம் தோல்வி அடைந்த உங்களுக்கு, இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட அடிக்க போகின்றது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். ஜாமின் கையெழுத்து யாருக்கும் போடாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாளாக உங்களைத் தொடர்ந்த ஒரு பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். மனநிறைவு பெறுவீர்கள். மனைவியிடம் கோபத்தை காட்டாதீர்கள். அனுசரணையாக பேசினால் பிரச்சினை கிடையாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

Friday 19 April 2024

மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி..!!!

மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி..!!!



மத்திய கிழக்கு வலயம் தொடர்பில் தற்போது முழு உலகின் கவனமும் திரும்பியுள்ளது.

ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாக வெளியாகும் தகவல்களையடுத்து, இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல், ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே தேசிய பாதுகாப்பு பேரவை இன்று அவசரமாக கூடியுள்ளது.

மத்திய, கிழக்கு வலயத்தில் அபாயத்தை தோற்றுவிக்கும் வகையில், தற்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நெருக்கடி யுத்தமாக திரிபடைந்து வருகின்றது.

வான் பரப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கும் இஸ்ரேலிலிருந்து ஈரானுக்கும் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் தீவிரம் பெற்ற காஸா நெருக்கடியினை அடுத்தே, ஈரான் - இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கு வலயத்தில் யுத்த அபாயத்தை தோற்றுவித்துள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டமையை அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய, கிழக்கு வலயத்தில் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கு முன்னரும் இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்ததாக ஈரானின் அரச ஊடகம் அறிவித்திருந்தது.

எனினும், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேலுக்கு எவ்வித மன்னிப்பையும் வழங்குவதில்லை எனவும் அந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் ஈரான் நேரடியாக அறிவித்ததுடன், இந்த அறிவிப்பு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பின்புலத்தில் கடந்த 13 ஆம் திகதி ஈரான் முதற்தடவையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அதற்கமைய, ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இஸ்ரேல் ஈரானின் இஸ்பஹான் நகரை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்காவின் உளவுப் பிரிவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.

ஈரான் - இஸ்ரேல் மோதல் இவ்வாறு வலுப்பெறும் போது, இஸ்ரேல் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு பதிலாக இஸ்பஹான் நகர் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டமையால், முழு உலகமும் மத்திய கிழக்கு வலயம் தொடர்பில் பார்வையை திருப்பியுள்ளன.

ஈரானின் மிகப்பெரிய விமான படைத்தளம் , யுரேனியம் உற்பத்தி நிலையம் , ஏவுகணை முகாம், எரிபொருள் உற்பத்தி , யுரேனியம் ஆய்வுக்கூடம் , சேர்கோனியம் உற்பத்தி நிலையம் என்பன இஸ்பஹான் நகரை கேந்திரமாகக் கொண்டே அமைந்துள்ளன.

ஈரானின் இஸ்பஹான் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதி மற்றும் இஸ்பஹான் நகரின் கிழக்கு பிரதேசம் மீது இந்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் பின்னர் ஈரானின் விமான பாதுகாப்பு கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரையில் அந்த இடங்களில் வெடிப்புகளினால் ஏற்பட்ட சேத விபரம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்பஹான் நகரில் கேட்ட இந்த வெடிப்பு சத்தம் சந்தேகத்திற்கு இடமான பொருளொன்றின் மீது விமான பாதுகாப்பு கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் என ஈரான் தெரவித்துள்ளது.

இஸ்பஹான் அல்லது நாட்டின் எந்தவொரு பிரதேசத்தின் மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு தெரிவித்துத்துள்ளது.

சிலர் தமது வான் பரப்பில் ட்ரோன்களை பறக்கச் செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் அவ்வாறு அனுப்பப்பட்ட மூன்று ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா இன்று காலை அறிவித்தது.

எவ்வாறாயினும், தாக்குதலின் பின்னர் ஈரானின் தெஹ்ரான், சிராஸ் மற்றும் இஸ்பஹான் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, சில சர்வதேச விமான நிறுவனங்கள் ஈரானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், தமது விமான பயணப் பாதையையும் மாற்றியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து flydubai விமான சேவை ஈரானுக்கான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன், Lufthansa விமான சேவை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தமது விமான பயணத்தை நிறுத்தியுள்ளது.

இந்த மோதல் இலங்கையை எவ்வாறு பாதிக்கும்?

2022 ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின் படி 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் வெளிநாட்டு பணியாளர்களின் மூலம் கிடைத்துள்ளதுடன், அதில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் மூலம் 85% வருமானம் கிடைத்துள்ளது.

ஈரானின் யுத்த கப்பலொன்று இலங்கைக்கு வந்து சென்று ஒரு சில மாதங்களே ஆகின்றன.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்தால், இலங்கையை பாதிக்கும் மற்றுமொரு சம்பவமும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ள ஈரான் ஜனாதிபதியின் விஜயம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இலங்கை கடற்பரப்பின் அமைவிடம் மற்றும் பூகோள அமைவிடத்திற்கு ஏற்ப இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதனாலேயே மத்திய கிழக்கு வலயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.


கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தது என்ன?

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தது என்ன?


கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி  பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்..!!!

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்..!!!


அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்...!!!

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

போதைப்பொருள் பாவனையாலே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.

ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர்.





யாழ். பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்..!!!

யாழ். பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்..!!!

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!!

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!!


நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.


கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.

இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.