Friday 3 May 2024

யாழில், காதலி வீட்டுக்கு சென்று விபரீத முடிவெடுத்த இளைஞன்..!!!

யாழில், காதலி வீட்டுக்கு சென்று விபரீத முடிவெடுத்த இளைஞன்..!!!

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிறீவரதன் சஞ்சிதன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…


குறித்த இளைஞன் மேற்படி விலாசத்தில் உள்ள அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் பின்னர் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்..!!!

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்..!!!


சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் போராட்டத்தில் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கோசங்களை எழுப்பினர்.


அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர்.

அத்துடன், அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று வெள்ளிக்கிழமை (மே 03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 292.1290 ஆகவும் விற்பனை விலை ரூபா 301.9031 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!!!

லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!!!



லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!



பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!

100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!


ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளானது பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகும். இந்த நாள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு உகந்த மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி வருகிறது.

வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும்.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணம் தேடி வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.


மேஷம்

அட்சய திருதியை நாளில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

அட்சய திருதியை நாளில் கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!

வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!



காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக 'சிவகங்கை' எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன.

இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.