Friday 3 May 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று வெள்ளிக்கிழமை (மே 03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 292.1290 ஆகவும் விற்பனை விலை ரூபா 301.9031 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!!!

லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!!!



லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!



பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!

100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!


ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளானது பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகும். இந்த நாள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு உகந்த மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி வருகிறது.

வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும்.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணம் தேடி வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.


மேஷம்

அட்சய திருதியை நாளில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

அட்சய திருதியை நாளில் கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!

வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!



காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக 'சிவகங்கை' எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன.

இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.
இரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ; மனைவி உயிர்மாய்ப்பு..!!!

இரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ; மனைவி உயிர்மாய்ப்பு..!!!



வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில் கீரிசுட்டான் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லோகநாதன் வயது 47 மற்றும் அவரது மனைவியான லோகநாதன் பரமேஸ்வரி வயது 37 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.


குறித்த இருவரும் முரண்பாடு காரணமாக சிலகாலங்கள் பிரிந்திருந்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கணவனின் தலையில் இரத்தக்காயம் இருக்கும் நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல வைத்திய நிபுணர் இடமாற்றம்..!!!

பிரபல வைத்திய நிபுணர் இடமாற்றம்..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரன் இன்று முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்கின்றார்.

இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.


எனவே இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரனின் பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளார்.

வைத்திய நிபுணர் சிறிதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.